திருப்பூரில் நடக்கும் அண்ணாவின் 107-வது பிறந்த நாள் விழா மற்றும் மதிமுக மாநாடையொட்டி ம.தி.மு.க. சார்பில் திராவிட இயக்க நூற்றாண்டு சுடர் ஓட்டத்திற்கு நேற்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு திருச்சி காவல்துறை அனுமதி மறுத்தநிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதியுடன் திராவிட இயக்க நூற்றாண்டு சுடர் ஓட்டம் நேற்று மாலை திருச்சியில் தொடங்கி
கரூர் வந்தது. பின்னர் கரூர் வந்த சுடர் ஓட்டம் நாமக்கல் நோக்கி சென்றது.
திராவிட இயக்க நூற்றாண்டு விழா, அண்ணாவின் 107-வது பிறந்தநாள் விழா, ம.தி.மு.க. மாநாடு ஆகியவை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதற்காக திருச்சி மாநகர் முதல் பல்லடம் வரை திராவிட இயக்க நூற்றாண்டு சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாணவர் தொடர் ஓட்டம் வருகிற 15-ந் தேதி திருப்பூர் பல்லடத்தில் மாநாடு திடலில் முடியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு அனுமதி கோரி ம.தி.மு.க. மாநில மாணவரணி செயலாளர் ராஜேந்திரன் போலீசாரிடம் மனு அளித்து இருந்தார். நேற்று காலை 10 மணி அளவில் சத்திரம் பஸ் நிலையம் அருகே மாணவர் சுடர் ஓட்டம் தொடங்க இருந்தது.
ஆனால் மாணவர் சுடர் ஓட்டத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் திடீரென அனுமதி மறுத்தனர். இதனால் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசாரின் அனுமதி மறுப்புக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, மாணவர் சுடர் ஓட்டம் நடத்த அனுமதி வழங்கியது. இதையடுத்து நேற்று மாலை சிந்தாமணி அண்ணாசிலை பகுதியில் இருந்து மாணவர் சுடர் ஓட்டத்தை தொடங்கினர்.
நிகழ்ச்சிக்கு மாநில மாணவரணி செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. ஆட்சிமன்ற குழு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான கணேசமூர்த்தி சுடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் இந்த சுடர் ஓட்டத்தை ம.தி.மு.க மாநில மாணவரணி நிர்வாகிகள் பலரும் ஏந்தி சென்றனர்.
சுடர் ஓட்டம் திருச்சியில் தொடங்கி, ஜீயபுரம், குளித்தலை, லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், கரூர் வந்தது. கரூருக்கு வருகை தந்த அந்த சுடர் ஓட்ட குழுவை ம.தி.மு.க அரவக்குறிச்சி செயலாளர் கலையரசன் வரவேற்றார். பின்னர் கரூரிலிருந்து இன்று அந்த சுடர் ஓட்டம் துவங்கி நாமக்கல் வழியாக, ஈரோடு, திருப்பூர் செல்ல உள்ளது. முன்னதாக கரூரில் பேட்டியளித்த மறுமலர்ச்சி தி.மு.க மாணவரணி செயலாளர் தி.மு.இராஜேந்திரன் தெரிவிக்கையில் பேரறிஞர் அண்ணாவின் பெயரை சொல்லி ஆட்சி நடத்துகின்ற அ.தி.மு.க அரசு அண்ணாவின் பிறந்த நாளுக்கே தடை விதித்தது போல் இத்தைகைய செயல் இருந்ததாகவும், எங்களது பொதுச்செயலாளர் சென்னை உயர்நீதிமன்ற கிளையில் அந்த தடையை தகர்த்தெரிந்து அண்ணாவின் பிறந்த நாளை சீறும் சிறப்புமாக கொண்டாடும் வகையில் எங்களுக்கு வழிவகை செய்து தந்துள்ளார். என்றார். மேலும் சுமார் 324 கி.மீட்டர் தூரம் செல்லும் இந்த சுடர் ஓட்டமானது, கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் வழியாக நாமக்கல் மாவட்டம், க.பரமத்தி வேலூர் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக நாமக்கல் வழியாக பல்லடத்தை சென்று அடைகிறது. பல்லடத்தில் மாநாட்டு திடலில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சுடரை பெற்று கொள்கிறார். நிகழ்ச்சியில் ம.தி.மு.க இலக்கிய அணி துணை செயலாளர் பொத்தனூர்.ஈழபாரதி, அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கலையரசன், தாந்தோன்றி ஒன்றிய செயலாளர் கபினி.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேட்டி
: திமு.இரோஜேந்திரன் – மாநில மாணவரணி செயலாளர் – ம.தி.மு.க

No comments:
Post a Comment