டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நடிகர் கமல்ஹாசன் திடீரென சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு தமிழ்நாட்டின் தூதராக கமல்ஹாசன் நியமிக்கப்பட்டார், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களக்கு தூய்மை இந்தியா திட்டதின் தூதராக நியமிக்கப்பட்ட பிரபலங்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி மாளிகையில் நேற்று தேநீர் விருந்தளித்தார்.
இந்த தேநீர் விருந்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான்கான், பிரியங்கா சோப்ரா, அமலா நாகார்ஜுனா, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர், தொழிலதிபர் அணில் அம்பானி, இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்கிடையே டில்லியில் ஆம்ஆத்மி கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை நடிகர் கமல்ஹாசன் திடீரென சந்தித்து பேசியிருக்கிறார். அப்பொழுது கெஜ்ரிவால் கமல்ஹாசனிடம் இந்தியாவின் அரசியில் குறித்தும் விரிவாக விவாதித்தாகவும், தமிழகத்தி்ன் அரசியல் சூழ்நிலை குறித்து கேட்டறிந்ததாகவும்,தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு சரியான தலைமை இல்லை என்றும் மாநில தலைவராக நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்ற கமல்ஹாசனிடம் கெஜ்ரிவால் கேட்டு கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு சரியான தலைமை இல்லாத நிலையில், இந்த சந்திப்பு நடந்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment