கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்திற்கு மாவட்ட லயன்ஸ் ஆளுனர் வருகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்சியில் பிடி அரிசித்திட்டம் உள்ளிட்ட சேவைகள் நிறைவேற்றப்பட்டன.
கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்திற்கு ஆளுனர் அலுவல் வருகையாக 324 A 2 லயன்ஸ் மாவட்ட ஆளுனர் பி.எம்.ஜே.எப். அரிமா. எஸ்.வேதநாயகம், மாவட்ட முதல் பெண்மணி சாந்தி வேதநாயகம் ஆகியோர் வருகை புரிந்தனர். முதலில் பாதுகாப்பு, தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணியாக 150 லியோ சங்கத்தினர் கலந்து கொண்ட மாபெரும் இரு சக்கர பேரணியை லயன்ஸ் ஆளுநர் வேதநாயகம் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். மாலை அலுவல் விழாவில் ஆளுனரின் பிடி அரிசித் திட்டப்படி 1 லட்சம் கிலோ வழங்குதலில் கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் பங்காக கரூர் பகுதியில் உள்ள சக்தி ஆதரவற்றோர் இல்லம், அன்பாலயம், கரூர் அன்புக்கரங்கள், யுகம் டிரஸ்ட், சித்தார்த்தா டிரஸ்ட் உள்ளிட்ட ஆதரவற்ற குழந்தைகளை பராமரிக்கும் இல்லங்களுக்கு முதல் கட்டமாக ஆயிரம் கிலோ அரிசி வழங்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கு சிண்டெக்ஸ் டேங்க், மின் விசிறி, கல்வி, மருத்துவ உதவிகள், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வி.பழநியப்பன், கரூர் நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலலிதா, நகராட்சி துப்புரவு தொழிலாளி இரா.வையாபுரி, கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் பரிந்துரைத்து லயன்ஸ் நல்லாசிரியர் விருது பெற்ற கு.பரணிதரன் உள்ளிட்டோர் பாராட்டு பெற்றனர். முன்னதாக ஆளுநர் எஸ்.வேதநாயகத்தை மாவட்ட அமைச்சரவை ஆலோசகர் மேலை.பழனியப்பன் அறிமுகப்படுத்தினார்.
ஆளுநர் பி.எம்.ஜே.எப். அரிமா எஸ்.வேதநாயகம், சாந்தி வேதநாயகம், அவைச்செயலாளர் ஜனார்த்தனன், மண்டலத் தலைவர் சூர்யா. வே.கதிரவன், வட்டாரத்தலைவர் கே.மனோகரன், எஸ்.கே.டி.எம்.கருப்புசாமி வாழ்த்துரைத்தனர். கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க தலைவர் இன்ஜினியர்.ஆர்.தினகரன், செயலாளர் வழக்கறிஞர் பி.கார்த்திகேயன், பொருளாளர் குமாரராஜா ஆகியோர் வரவேற்றனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய லயன்ஸ் ஆளுனர் பி.எம்.ஜே.எப்.அரிமா எஸ்.வேதநாயகம், இந்த லயன்ஸ் சங்கம், உலகளவில் இருந்தாலும் கண் தானத்தில் இந்தியா இரண்டாமிடம்., அதில் தமிழகம் முதலிடம் என்று பெருமை படுத்தினார். இரத்த தானத்தை தொடர்ந்து கண் தானம் மனிதன் வாழ்வில் அவசியம் என்று பேசினார். உடல் உறுப்புகள் தானத்திலும் லயன்ஸ் சங்கங்கள் சிறந்து விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment