Sunday, 13 September 2015

நரபலி கொடுக்கப்பட்ட இடத்தில் எலும்பு துண்டுகள் கண்டெடுப்பு: உறங்காமல் காவல் காத்த சகாயம் டீம்! யார், யாரையோ பாராட்டுகிறீர்கள் இவரை நீங்கள் கண்டிப்பாக பாராட்டத்தான் வேண்டும்






மதுரை மேலுரில் பி.ஆர்.பி நிறுவனம் நரபலி கொடுத்தததாக கூறப்படும் இடத்தில் இருந்து எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மலம்பட்டி சுடுகாட்டில் ஆர்.டி.ஓ. செந்தில் குமாரி, சகாயம் குழு முன்னிலையில் சுடுகாட்டில் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. சுடுகாட்டில் சேவற்கொடியோன் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டிய போது எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது
தற்போது, கிரானைட் விசாரனை இறுதிக்கட்டதை எட்டி, இன்னும் ஓரிரு நாட்களில் உயர் நீதிமன்றத்தில் சகாயம் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதிரடியாக மணிமுத்தாறு சுடுகாட்டில் புதைக்கப்பட்ட இருவரின் உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய சகாயம் குழுவினர் நேற்று காலை 10:00 மணிக்கு சுடுகாட்டிற்கு வந்தனர். புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய 12 ஆம் தேதி காலையில் சகாயம் மாவட்ட நிர்வாகதிற்கும், காவல்துறைக்கும் முறைப்படி தகவலை அனுப்பிவிட்டு நரபலி கொடுத்து உடலை புதைத்த இடத்திற்க்கு சேவற்க்கொடியானுடன் அவர் வந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது .
ஆனால் மாவட்ட நிர்வாகத்தினர், தாசில்தார் கிருஷ்ணண், ஆர்.டி.ஓ. செந்தில் குமாரி உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும் பல்வேறு வேலைகளை கொடுத்து சம்பவ இடத்தில் இருந்து போகச் சொல்லிவிட்டனர். அதேபோல், பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவக்குழுவையும சம்பவ இடத்திற்க்கு அனுப்பாமல் இழுத்தடித்து. மதுரையில் இருந்து சென்ற 5 பேர் கொண்ட மருத்துவக்குழுவை, நான்கு மணி நேரமாக மேலூர் காவல் நிலையத்தில் உட்கார வைத்து மாலை ஆறு மணிக்கு மேல் மலம்பட்டிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் சம்பவ இடதிற்க்கு சென்ற மருத்துவக்குழுவினர், சூரியன் மறைந்துவிட்டதால் இனி பிரேத பரிசோதனை செய்ய முடியாது. அதனால் பிணத்தை தொண்ட வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டனர்.
நண்பகல் இரண்டு மணிக்கு மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர் உங்களை அனுப்பிவிட்டதாக தகவல் சொன்னார்கள். ஆனால் நீங்கள் ஏன் இவ்வளவு தாமதமாக வந்துள்ளீர்கள் என்று சகாயம் கேட்டார். அதற்கு, இவ்வளவு நேரம் போலீஸ் என்கொயரி என்று சொன்னதோடு, மாவட்ட ஆட்சியர் சொன்னால்தான் வேலையை செய்வோம் என்று சகாயத்துடன் வாக்குவாதம் செய்தனர். சகாயம், ''இது உயர் நீதிமன்றம் அமைத்த சட்டப்பனிக்குழு. நான் அதன் ஆணையர் என்கிற முறையில் சொல்கிறேன் நீங்கள் பணியை தொடங்குங்கள்" என்றார். அதற்கு மருத்துவக்குழு, ''எங்களுக்கு ஆட்சியர் தான் எல்லாமே" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர் .
அதன் பிறகு ஏதோ சூழ்ச்சி நடப்பதை உனர்ந்த சகாயம், அந்த இடத்தைவிட்டு நகராமல் இரவு முழுவதும் சுடுகாட்டிலேயே இருக்கப்போவதாக கூறிவிட்டு, கீழே அட்டை, பேப்பர் போன்றவற்றை போட்டு அதில் அமர்ந்து விட்டார். அந்த சுடுக்காட்டில் மின்சார வசதி இல்லாமல் இருப்பதால், மாவட்ட நிர்வாகத்திடம் ஜெனரேட்டர் வசதி செய்து கொடுக்க சொல்லி கேட்டார். ஆனால், மாவட்ட நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. அதனால், அதிகாரி சகாயத்திற்கு ஜெனரேட்டர் வசதி செய்து கொடுக்க பொது மக்கள் மேலூரில் இருந்து ஜெனரேட்டர் ஒன்றும் அதனை ஆப்ரேட்டிங் செய்ய ஆப்ரேட்டர் ஒருவரையும் மினி லாரியில் அழைத்து வந்தனர். ஆனால், வரும் வழியில் அந்த ஜெனரேட்டர் ஆபரேட்டரை மேலுர் காவல் உதவி ஆய்வாளர் அய்யனார் போகவிடாமல் தடுத்து அழைத்து சென்றதோடு, ஜெனரேட்டரில் இருந்த முக்கிய பாகம் ஒன்றையும் கழட்டி எடுத்து சென்று இருக்கிறார்.
அதனால், உணவை கூட சுடுகாட்டிற்கே வரவழைத்து உண்ட சகாயம் இரவு முழுவதும் பெட்ரோமாக்ஸ் லைட் உதவியுடன் கயிற்று கட்டிலில் சுடுகாட்டிலேயே படுத்து கிடந்தார். அவருடன், பொதுமக்களும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்களும், சட்டப் பஞ்சாயத்து அமைப்பை சேர்ந்தவர்களும் இரவு முழுவதும் சகாயம் குழுவினருக்கு பாதுகாப்பாக இருந்தனர்.

Saturday, 12 September 2015

மதிமுகவினரின் திராவிட இயக்க நூற்றாண்டு சுடர் ஓட்டம் கரூரில் இரண்டாம் நாளாக தொடங்கியது அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டு ஆட்சி செய்யும் அ.தி.மு.க விலேயே அண்ணாவின் பிறந்த நாளுக்கு தடை விளைவிக்கும் செயலாக உள்ளது – மாநில மாணவரணி செயலாளர் தி.மு.இராஜேந்திரன் கரூரில் வேதனை



திருப்பூரில் நடக்கும் அண்ணாவின் 107-வது பிறந்த நாள் விழா மற்றும் மதிமுக மாநாடையொட்டி .தி.மு.. சார்பில் திராவிட இயக்க நூற்றாண்டு சுடர் ஓட்டத்திற்கு நேற்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு திருச்சி காவல்துறை அனுமதி மறுத்தநிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதியுடன் திராவிட இயக்க நூற்றாண்டு சுடர் ஓட்டம் நேற்று மாலை திருச்சியில் தொடங்கி கரூர் வந்தது. பின்னர் கரூர் வந்த சுடர் ஓட்டம் நாமக்கல் நோக்கி சென்றது.
திராவிட இயக்க நூற்றாண்டு விழா, அண்ணாவின் 107-வது பிறந்தநாள் விழா, .தி.மு.. மாநாடு ஆகியவை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதற்காக திருச்சி மாநகர் முதல் பல்லடம் வரை திராவிட இயக்க நூற்றாண்டு சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாணவர் தொடர் ஓட்டம் வருகிற 15-ந் தேதி திருப்பூர் பல்லடத்தில் மாநாடு திடலில் முடியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு அனுமதி கோரி .தி.மு.. மாநில மாணவரணி செயலாளர் ராஜேந்திரன் போலீசாரிடம் மனு அளித்து இருந்தார். நேற்று காலை 10 மணி அளவில் சத்திரம் பஸ் நிலையம் அருகே மாணவர் சுடர் ஓட்டம் தொடங்க இருந்தது. 
ஆனால் மாணவர் சுடர் ஓட்டத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் திடீரென அனுமதி மறுத்தனர். இதனால் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசாரின் அனுமதி மறுப்புக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, மாணவர் சுடர் ஓட்டம் நடத்த அனுமதி வழங்கியது. இதையடுத்து நேற்று மாலை சிந்தாமணி அண்ணாசிலை பகுதியில் இருந்து மாணவர் சுடர் ஓட்டத்தை தொடங்கினர். 
நிகழ்ச்சிக்கு மாநில மாணவரணி செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். .தி.மு.. ஆட்சிமன்ற குழு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான கணேசமூர்த்தி சுடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் இந்த சுடர் ஓட்டத்தை ம.தி.மு.க மாநில மாணவரணி நிர்வாகிகள் பலரும் ஏந்தி சென்றனர். 
சுடர் ஓட்டம் திருச்சியில் தொடங்கி, ஜீயபுரம், குளித்தலை, லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், கரூர் வந்தது. கரூருக்கு வருகை தந்த அந்த சுடர் ஓட்ட குழுவை ம.தி.மு.க அரவக்குறிச்சி செயலாளர் கலையரசன் வரவேற்றார். பின்னர் கரூரிலிருந்து இன்று அந்த சுடர் ஓட்டம் துவங்கி நாமக்கல் வழியாக, ஈரோடு, திருப்பூர் செல்ல உள்ளது. முன்னதாக கரூரில் பேட்டியளித்த மறுமலர்ச்சி தி.மு.க மாணவரணி செயலாளர் தி.மு.இராஜேந்திரன் தெரிவிக்கையில் பேரறிஞர் அண்ணாவின் பெயரை சொல்லி ஆட்சி நடத்துகின்ற அ.தி.மு.க அரசு அண்ணாவின் பிறந்த நாளுக்கே தடை விதித்தது போல் இத்தைகைய செயல் இருந்ததாகவும், எங்களது பொதுச்செயலாளர் சென்னை உயர்நீதிமன்ற கிளையில் அந்த தடையை தகர்த்தெரிந்து அண்ணாவின் பிறந்த நாளை சீறும் சிறப்புமாக கொண்டாடும் வகையில் எங்களுக்கு வழிவகை செய்து தந்துள்ளார். என்றார். மேலும் சுமார் 324 கி.மீட்டர் தூரம் செல்லும் இந்த சுடர் ஓட்டமானது, கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் வழியாக நாமக்கல் மாவட்டம், க.பரமத்தி வேலூர் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக நாமக்கல் வழியாக பல்லடத்தை சென்று அடைகிறது. பல்லடத்தில் மாநாட்டு திடலில் .தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ சுடரை பெற்று கொள்கிறார். நிகழ்ச்சியில் ம.தி.மு.க இலக்கிய அணி துணை செயலாளர் பொத்தனூர்.ஈழபாரதி, அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கலையரசன், தாந்தோன்றி ஒன்றிய செயலாளர் கபினி.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேட்டி : திமு.இரோஜேந்திரன் – மாநில மாணவரணி செயலாளர் – ம.தி.மு.க


பாராட்டுக்கு மேல் பாராட்டுக்கள் குவிகிறது தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற சேரன் பள்ளி முதல்வர் வி.பழநியப்பன்


டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் தேசிய நல்லாசிரிய விருது பெற்ற கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் வி.பழநியப்பனுக்கு கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க அலுவல் விழாவில் லயன்ஸ் ஆளுனர் பிம்.எம்.ஜே.எப். அரிமா எஸ்.வேதநாயகம், கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் சார்பில் பாராட்டி பரிசுகள் வழங்கிய போது எடுத்த படம். அருகில் மாவட்ட அமைச்சரவை ஆலோசகர் மேலை.பழநியப்பன், கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க தலைவர் இன்ஜினியர் ஆர்.தினகரன், செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகேயன், பொருளாளர் குமாரராஜா, மண்டல தலைவர் சூர்யா.வே.கதிரவன் உள்ளிட்டோர் உள்ளனர்

Friday, 11 September 2015

பிடி அரிசித்திட்டத்தில் கரூர் மெஜஸ்டிக் சங்கம் பங்களிப்பு ! ஆளுநர் வருகை விழாவிலேயே ஆயிரம் கிலோ அரிசி வழங்கியது


கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்திற்கு மாவட்ட லயன்ஸ் ஆளுனர் வருகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்சியில் பிடி அரிசித்திட்டம் உள்ளிட்ட சேவைகள் நிறைவேற்றப்பட்டன.
கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்திற்கு ஆளுனர் அலுவல் வருகையாக 324 A 2 லயன்ஸ் மாவட்ட ஆளுனர் பி.எம்.ஜே.எப். அரிமா. எஸ்.வேதநாயகம், மாவட்ட முதல் பெண்மணி சாந்தி வேதநாயகம் ஆகியோர் வருகை புரிந்தனர். முதலில் பாதுகாப்பு, தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணியாக 150 லியோ சங்கத்தினர் கலந்து கொண்ட மாபெரும் இரு சக்கர பேரணியை லயன்ஸ் ஆளுநர் வேதநாயகம் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். மாலை அலுவல் விழாவில் ஆளுனரின் பிடி அரிசித் திட்டப்படி 1 லட்சம் கிலோ வழங்குதலில் கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் பங்காக கரூர் பகுதியில் உள்ள சக்தி ஆதரவற்றோர் இல்லம், அன்பாலயம், கரூர் அன்புக்கரங்கள், யுகம் டிரஸ்ட், சித்தார்த்தா டிரஸ்ட் உள்ளிட்ட ஆதரவற்ற குழந்தைகளை பராமரிக்கும் இல்லங்களுக்கு முதல் கட்டமாக ஆயிரம் கிலோ அரிசி வழங்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கு சிண்டெக்ஸ் டேங்க், மின் விசிறி,  கல்வி, மருத்துவ உதவிகள், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வி.பழநியப்பன், கரூர் நரிக்கட்டியூர்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலலிதா, நகராட்சி துப்புரவு தொழிலாளி இரா.வையாபுரி, கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் பரிந்துரைத்து லயன்ஸ் நல்லாசிரியர் விருது பெற்ற கு.பரணிதரன் உள்ளிட்டோர் பாராட்டு பெற்றனர். முன்னதாக ஆளுநர் எஸ்.வேதநாயகத்தை மாவட்ட அமைச்சரவை ஆலோசகர் மேலை.பழனியப்பன் அறிமுகப்படுத்தினார்.
ஆளுநர் பி.எம்.ஜே.எப். அரிமா எஸ்.வேதநாயகம், சாந்தி வேதநாயகம், அவைச்செயலாளர் ஜனார்த்தனன், மண்டலத் தலைவர் சூர்யா. வே.கதிரவன், வட்டாரத்தலைவர் கே.மனோகரன், எஸ்.கே.டி.எம்.கருப்புசாமி வாழ்த்துரைத்தனர். கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க தலைவர் இன்ஜினியர்.ஆர்.தினகரன், செயலாளர் வழக்கறிஞர் பி.கார்த்திகேயன், பொருளாளர் குமாரராஜா ஆகியோர் வரவேற்றனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய லயன்ஸ் ஆளுனர் பி.எம்.ஜே.எப்.அரிமா எஸ்.வேதநாயகம், இந்த லயன்ஸ் சங்கம், உலகளவில் இருந்தாலும் கண் தானத்தில் இந்தியா இரண்டாமிடம்., அதில் தமிழகம் முதலிடம் என்று பெருமை படுத்தினார். இரத்த தானத்தை தொடர்ந்து கண் தானம் மனிதன் வாழ்வில் அவசியம் என்று பேசினார். உடல் உறுப்புகள் தானத்திலும் லயன்ஸ் சங்கங்கள் சிறந்து விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

நடிகர் கமலஹாசன் ஆம் ஆத்மியில் இணைந்தாரா ? இல்லையா ?



டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நடிகர் கமல்ஹாசன் திடீரென சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பு  தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு தமிழ்நாட்டின் தூதராக கமல்ஹாசன் நியமிக்கப்பட்டார், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களக்கு தூய்மை இந்தியா திட்டதின் தூதராக நியமிக்கப்பட்ட பிரபலங்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி மாளிகையில் நேற்று தேநீர் விருந்தளித்தார்.

இந்த தேநீர் விருந்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான்கான், பிரியங்கா சோப்ரா, அமலா நாகார்ஜுனா, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர், தொழிலதிபர் அணில் அம்பானி, இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதற்கிடையே டில்லியில் ஆம்ஆத்மி கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை நடிகர் கமல்ஹாசன் திடீரென சந்தித்து பேசியிருக்கிறார். அப்பொழுது கெஜ்ரிவால் கமல்ஹாசனிடம் இந்தியாவின் அரசியில் குறித்தும் விரிவாக விவாதித்தாகவும், தமிழகத்தி்ன் அரசியல் சூழ்நிலை குறித்து கேட்டறிந்ததாகவும்,தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு சரியான தலைமை இல்லை என்றும் மாநில தலைவராக நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்ற  கமல்ஹாசனிடம் கெஜ்ரிவால் கேட்டு கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு சரியான தலைமை இல்லாத நிலையில், இந்த சந்திப்பு நடந்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Wednesday, 9 September 2015

கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வி.பழநியப்பனுக்கு தேசிய நல்லாசிரியர் விருதினை இந்திய ஜனாதிபதி வழங்கினார்



கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வி.பழநியப்பனுக்கு தேசிய நல்லாசிரியர் விருதினை இந்திய ஜனாதிபதி வழங்கி கொளரவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் மனித வளத்துறை சார்பாக தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

இந்த வருடம் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து 22 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தொடக்க, நடுநிலைப்பள்ளியில் இருந்து 15 ஆசிரியர்களும், உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் இருந்து 7 ஆசிரியர்களும் தேர்வாகி உள்ளனர். இதில் சென்னையை சேர்ந்த 3 ஆசிரியர்கள் இடம் பெற்றிருந்தனர்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்.தாஸ் (தலக்கஞ்சேரி, திருவள்ளூர்), எஸ்.சுவர்னாபாஸ் (மீஞ்சூர்), வி.கணேசன் (பொன்டூர்), சி.ஏகாம்பரம் (கீழமனக்குடி), என்.பாலசுப்பிரமணியன் (கீழ்மாந்தூர்), கே.சிற்றம்பலம் (இடையப்பட்டி), எஸ்.காளி முத்து (விஸ்வநாதப்பட்டி), பி.தனராஜ் (பொன்னம்பாளையம்).

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்.விஜயலலிதா (நரிகட்டியூர்), டீ.ராணிசிவகாமி (சூண்டி), அரசு உதவி பெறும் தனியார் தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் எஸ்.அமலோற்பவம் (செயிண்ட் ஜான்ஸ் நடுநிலை பள்ளி, ராயப்பேட்டை, சென்னை), ஏ.ஜோசப்பன் செல்வமேரி (ராஜா பரமேஸ்வரி, அண்ணாநகர், மதுரை).

டி.எஸ்.அன்பு எப்சிபாஸ் (டி.என்.டி.டி.ஏ. ராஜமானிய புரம், தூத்துக்குடி), எஸ்.பொன்ராஜ் (சி.எம்.எஸ்.மேரி ஆர்டன், பாளையங்கோட்டை, திருநெல்வேலி), எம்.செல்வகுமார் (ராஜரிஜி அர்த்த நாரீச வர்மா தொடக்கப்பள்ளி, ராயபுரம், சென்னை).

அரசு, அரசு உதவி பெறும், தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள்–வி.ஹரிமூர்த்தி (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைபள்ளி, திருத்துறையூர், கடலூர்), என்.ராமச்சந்திரன் (உடற்கல்வி ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சி.தனபால் (முதுகலை பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, குமலன் குட்டை, ஈரோடு).

எ.பிரான்சிஸ் சேவியர் (தலைமை ஆசிரியர், ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, திருச்சி), பி.ஜார்ஜ்பால் (உதவி தலைமை ஆசிரியர், டான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எழும்பூர், சென்னை).

தங்கபிரகாஷ் (முதல்வர் சன்டீம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மேட்டுகுளம் வேலூர்), வி.பழனியப்பன் (முதல்வர், சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெண்ணைமலை, கரூர்) ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு ஜனாதிபதி கையில் விருது வாங்கினார்கள்.
கரூர் வெண்ணமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வி.பழநியப்பன் டெல்லியில் உள்ளா ஜனாதிபதி மாளிகையில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் தேசிய நல்லாசிரியர் விருதினை வாங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் மனித வள மேம்பாட்டுத்துறை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகிகள் கருப்பண்ணன், பாண்டியன் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் ஏராளமானோர் கொளரவித்தனர். மேலும் கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன், கரூர் பரணி பார்க் மெட்ரிக் பள்ளி முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளி நிர்வாகிகள் பலரும் கொளரவித்த வண்ணம் உள்ளனர்.

கரூர் வீனஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி 5 மணி நேரம் வீணை வாசித்து தேசிய சாதனை



கரூர் சின்னாண்டாங்கோயில் ரோட்டில் அமைந்துள்ள வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிப்பவர் கே.விஸ்வ ஜனனி, இவர் இப்பகுதியில் வசிக்கும் என்.கிருஷ்ணமூர்த்தி - வி.கே.காயத்ரி இத்தம்பதியினரின் மகளான இவர், இங்குள்ள வீனஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுவயதில் இருந்தே வீணை வாசிப்பதில் பல சாதனைகள் புரிந்த கே.விஸ்வ ஜனனி புதன் கிழமை (09-09-15) அன்று 5 மணி நேரம் வீணை வாசித்து தேசிய சாதனை புரிந்துள்ளார்.
கரூர் வீனஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை வீனஸ் மெட்ரிக் பள்ளி செயலாளர் கே.நதியா துவக்கி வைத்தார். கரூர் வேலன் மருத்துவமனை மருத்துவர் கே.கே.வேலுச்சாமி தலைமை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஆசிய, உலக சாதனையாளரும், ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனருமான டிராகன் ஜெட்லி, கரூர் திருக்குறள் பேரவை செயலாளரும், கரூர் தமிழிசை சங்க செயலாளருமான மேலை.பழநியப்பன் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.
மாணவி கே.விஸ்வ ஜனனி 5 மணி நேரம் வீணை வாசித்து தேசிய சாதனை பிடித்தார். இந்த விருதினை நடுவர்கள் ஜெட்லி, மேலை.பழநியப்பன் ஆகியோர் வழங்கினார். மேலும் இந்த பதிவு ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஸில் இந்த வருடம் பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்ச்சியில் தேசிய சாதனை பிடித்த மாணவி. கே.விஸ்வ ஜனனிக்கு கரூர் திருக்குறள் பேரவை சார்பில் செயலாளர் மேலை.பழநியப்பனும், கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் சார்பில் லயன் மண்டல தலைவர் சூர்யா.வே.கதிரவன் ஆகியோர் பாராட்டினார்கள். மேலும்  இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் தமிழரசி இராஜேந்திரன், ஆர்.ஜெயநாராயண சிங், பள்ளி முதல்வர் மங்கையர்கரசி, தாம்ப்ராஸ் ஸ்ரீ தரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

Wednesday, 2 September 2015

இனக்கொலை குறித்து சர்வதேச விசாரணை: இலங்கை வட மாகாண சபைத் தீர்மானத்தை வரவேற்கிறோம்! தமிழக வாழ்வுரிமை கட்சி



தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத்தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
தமிழீழ மக்களின் உள்ளக்கிடக்கையை மீண்டும் ஒரு முறை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது இலங்கையின் வட மாகாண சபைஇலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற இனக்கொலை,போர்க்குற்றங்கள்மானிட விரோதக் குற்றங்கள் குறித்து சர்வதேசப் புலனாய்வுதான் வேண்டும்எந்த வடிவிலும் உள்நாட்டுப் பொறிமுறையை ஏற்க முடியாது என்று வட மாகாண முதலமைச்சர் திரு சி.விவிக்னேஸ்வரன் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேறச் செய்துள்ளார்.இதற்காக அவரையும் வட மாகாண சபை உறுப்பினர்களையும் தமிழக மக்கள் சார்பில் மனமாரப் பாராட்டுகின்றோம்.
கடந்த 2012, 2013, 2014 ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்த அமெரிக்கா இப்போது புலனாய்வு முடிந்து அறிக்கை வெளிவரப்போகும் நேரத்தில் இலங்கைக்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளதுஇது தமிழர்களை நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் செயல் என்று உலகத் தமிழர்கள் எல்லாம் அதிர்ந்து போயிருக்கும் நேரத்தில் வட மாகான சபைத் தீர்மானம் எங்கள் நெஞ்சில் பால் வார்த்துள்ளதுதமிழ் மக்கள்ளல் சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபையின் இந்தத் தீர்மானத்தை சர்வதேசம் மதித்து நடக்கும் என்று நம்புகிறோம்.
வட மாகாண சபைத் தீர்மானத்தையும் கடந்த காலத்தில்  தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாக இயற்றிய தீர்மானங்களையும் கருத்தில் கொண்டு இந்திய அரசு சர்வதேசப் பொறிமுறைக்கு ஆதரவாகவும் அமெரிக்கத் தீர்மானத்துக்கு எதிராகவும் மனித உரிமை மன்றத்தில் நிலையெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

உள்நாட்டுப் பொறிமுறையோ கலப்புப் பொறிமுறையோ நீதியை நிலைநாட்ட உதவாது என்று ஓங்கிக் குரல் எழுப்பிஈழத் தமிழர் இனக்கொலை குறித்து சர்வதேசப் பொறிமுறைசர்வதேச நீதிமன்றம்,  அல்லது சர்வதேசத் தீர்ப்பாயம் என்ற கோரிக்கையை ஈழத் தமிழர்களோடு சேர்ந்து    தமிழகத்  தமிழர்களும் ஒன்றுபட்டு எழுப்பவும்அதற்காக ஒன்றுபட்டுப் போராடவும் அறைகூவி அழைக்கிறோம் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.