Friday, 23 October 2015

வரும் சட்டமன்ற தேர்தலையடுத்து நமது கட்சியில் வார்டு கவுன்சிலர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் – கரூரில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் கோரிக்கை



தமிழக முதல்வரும், அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்கள் உத்திரவுக்கிணங்க கரூர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். கரூர் நகர்மன்ற தலைவர் தமிழ்நாடு செல்வராஜ், கரூர் மாவட்ட ஜெ பேரவை செயலாளரும், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ வுமான எஸ்.காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் அம்மாவின் செயல்திட்டங்களை அனைத்து பொதுமக்களும் நன்கு அறிவர். இந்தியா அளவில் ஏன் உலகளவில் மாணவ, மாணவிகளின் நலனி பெரும் அக்கறை கொண்டவர் நம் அம்மா அவர்கள் மட்டும் தான் பள்ளி படிப்பில் இருந்து கல்லூரி படிப்பு வரை விலையில்லா காலணி, விலையில்லா ஜாமின்ரி பாக்ஸ், விலையில்லா நோட் புத்தகங்கள், விலையில்லா சீருடைகள், விலையில்லா மடிக்கணினி என பல்வேறு திட்டங்களை அறிவித்ததோடு அதை செயல்படுத்தி மாணவ, மாணவிகளின் நலனில் பெரும் அக்கறை கொண்டவர். உலகளவில் நம் அம்மா ஒருவரே சென்ற மைனாரிட்டி தி.மு.க வினர் ஆட்சியில் மக்கள் பெற்ற துன்பங்கள் ஏராளம் அதையெல்லாம் நமது அம்மா அரியணையில் ஏறிய போது கொடுத்த வாக்குறிதிகளை செய்து சாதனை புரிந்ததை உலக பத்திரிக்கைகளில் இடம்பெற்றது என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் மாணவ, மாணவிகள் படித்து கல்வி பயின்று முடித்தால் அவர்களுக்கு திருமணத்திற்கு கூட தாலிக்கு தங்கம், திருமண உதவி என பல்வேறு திட்டங்களை ஏழை, எளியோர்களுக்கும் நம் மாநிலத்தில் வாழும் அனைவருக்கும் திட்டம் தீட்டி வருகிறார். நமது அம்மா உணவகத்தை பார்த்து தான் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தற்போது நமது அம்மா பாணியில் உணவகங்களை குறைந்த விலையில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறது. இது ஒன்று போதும் அம்மாவின் சாதனையை சொல்ல, இப்படி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நமது அம்மாவின் செயல்திட்டங்களை மக்களிடம் சொல்லி நமது கட்சி நல்ல பெயர் வாங்க ஒவ்வொரு அ.தி.மு.க தொண்டனும், உழைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் 1 வது வார்டு முதல் 5 வது வார்டு வரை ஏராளமான கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் தமிழக அளவில் கரூர் மாவட்டத்தில் தற்போது 2016 சட்டமன்ற தேர்தலுக்கான சுவரொட்டி எழுதும் இடத்தை பிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ தமிழக அரசியலில் வரும் சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்ட அ.தி.மு.க முந்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Thursday, 22 October 2015

மேக்ஸ்வெல் பரணகம அறிக்கை, ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாயின் நரித்தந்திரம்! வடக்கு மாகாண சபை, தமிழக சட்டமன்றத் தீர்மானங்களின் அடிப்படையில் பன்னாட்டு விசாரணை வேண்டும்! வைகோ அறிக்கை


ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத அரசு படைகளை ஏவி ஈழத்தமிழர்களை ஈவு இரக்கம் இன்றிக் கொடூரமாகக் கொன்று குவித்த படுகொலைகள் குறித்து, சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்தில், இலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட மேக்ஸ்வெல் பரணகமவின் 178 பக்க அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
இலங்கை சுதந்திரம் பெற்ற நாளில் இருந்தே ஈழத்தமிழர்களுக்குச் சம உரிமை மறுக்கப்பட்டு, அடக்குமுறைக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளானார்கள். அதிலும் 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த காலத்தில் திட்டமிட்ட தமிழ் இனப் படுகொலை நடைபெற்றது.
இந்த உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி ஆகும். கேல்லம் மேக்ரே அவர்கள் வெளியிட்ட ஆவணப்படங்களில், எட்டுத் தமிழ் இளைஞர்கள் அம்மணமாக, கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் இழுத்து வரப்பட்டு உச்சந்தலையில் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரமும், தமிழ் மகள் இசைப்பிரியா நாசமாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட அவலமும், இனப்படுகொலைக்குச் சரியான சாட்சியங்கள் ஆகும்.
இவற்றை புனையப்பட்ட போலிக் காட்சிகள் என்று மகிந்த ராஜபச்சேயின் அரசும், இராணுவமும் மறுத்து வந்தன. ஆனால் இந்தக் காட்சிகள் உண்மைதான் என்பதை மேக்ஸ்வெல் பரணகமவின் அறிக்கை ஒப்புக் கொள்கிறது.
2009 முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில், விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த பின்னர், வெள்ளைக் கொடியுடன் சரண் அடையச் சென்ற நடேசன், புலித்தேவன், ரமேஷ் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை மேக்ஸ்வெல் அறிக்கை ஒப்புக் கொள்கிறது. பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்ட ஏராளமான தமிழர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை என்பதையும் குறிப்பிடுகிறது.
இந்த மேக்ஸ்வெல் உள்ளிட்ட ஐந்து பேர் விசாரணைக் குழுவை நியமித்ததே மகிந்த ராஜபச்தோன்.
நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ஒரு நீதி விசாரணை நடைபெற வேண்டும் என்றும், வெளிநாட்டு நீதிபதிகளையும் அதில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
கொலையாளியே தீர்ப்பாளியாவதா? குற்றவாளியான இலங்கை அரசு நியமிக்கின்ற நீதிபதிகள் விசாரணை கூடாது; பன்னாட்டு விசாரணை வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
இந்த அறிக்கை ஆகஸ்ட் மாதத்திலேயே தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஐ.நா. மனித உரிமை ஆணையர் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திய பின்னர், தற்போதுதான் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு இருக்கின்றது. இதற்கு இடையில், ஜெனீவா மனித உரிமைகள் கமிசனில் இலங்கைக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது.
இந்த அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்தால், சிங்களர்களின் நரித்தந்திரம் நன்றாகத் தெரிகிறது.
சேனல் 4 காட்சிகள் மறுக்க முடியாத உண்மைகள் என்பதால் அதனை ஒப்புக்கொண்டு விட்டு, 1,47,000 தமிழர்கள் முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாள்களில் கொலை செய்யப்பட்டதை மூடி மறைப்பதற்காக விடுதலைப்புலிகள் மீது மேக்ஸ்வெல் அறிக்கை பழி சுமத்துகிறது.
தங்கள் தாயக ஈழ மக்களைப் பாதுகாப்பதற்காக உலகம் இதுவரை கண்டும் கேட்டுமிராத மகத்தான உயிர்த்தியாகத்தைச் செய்தவர்கள் விடுதலைப்புலிகள் ஆவார்கள். சிங்கள இராணுவம் தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசியும், மருத்துவமனைகளைக் கூட விட்டு வைக்காமல் பீரங்கி ஷெல்களாலும், விமானக் குண்டுவீச்சாலும் தமிழர்களைக் கொன்று குவித்த கொடுமையை ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன் அமைத்த மார்சுகி தாருஷ்மன், ஸ்டீவன் ராட்னர், யாஸ்மின் சூகா ஆகிய மூவர் குழு அறிக்கை ஆதாரங்களோடு நிரூபித்தது.
அதுபோலவே ஐ.நா. மனித உரிமை ஆணையர் அல்ராத் உசேன் அமைத்த மார்ட்டி அட்டிசாரி, சில்வியா கார்ட்ரைட், ஆஸ்மா ஜகாங்கீர் குழுவின் 268 பக்க அறிக்கையிலும், சிங்கள இராணுவம் நடத்திய படுகொலைகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்ற பழியில் இருந்து தப்புவதற்காகவே, ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாயின் வேலையைப் போல மேக்ஸ்வெல் அறிக்கை விடுதலைப்புலிகள் மீது பழி சுமத்துகிறது.
ஐ.நா. மனித உரிமை பிரகடனத்தின்படி உண்மை வெளிவர வேண்டுமானால், அதற்கு ஒரே வழி, சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை மட்டுமே ஆகும்.
ஈழத்தமிழர்கள் படுகொலையை நடத்த சிங்கள அரசுக்கு உதவிய இந்திய அரசு உள்ளிட்ட நாடுகளின் அரசுகள், பன்னாட்டு நீதி விசாரணையை நடைபெற விடாமல், நீதியைக் குழிதோண்டிப் புதைக்கின்ற வேலையில் தொடர்ந்து ஈடுபடுகின்றன.
இலங்கையின் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தமிழக சட்டமன்றத்தில் 2015 செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஆகியவற்றின் அடிப்படையில், சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணையை நடத்துவதற்குத் தாய்த் தமிழகத்திலும், தரணி எங்கும்உள்ள தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுவதே இன்றைய கடமை ஆகும் என அவர் தெரிவித்துள்ளார்

சர்வதேச சமூகமே! இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை உண்மை என ஒப்புக் கொண்டது உள்நாட்டு விசாரணை ஆணையம்!! ராஜபக்சே, பொன்சேகா, சிறிசேன உள்ளிட்டோரை இனப்படுகொலை மற்றும் சர்வதேச போர்க்குற்றவாளிகளாக பிரகனடப்படுத்தி தண்டனை வழங்கிடுக! தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத்தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்

panruti velmurugan
தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.,
இலங்கையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சேவால் 2013ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான விசாரணைக் குழு தன்னுடைய அறிக்கையை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவால் இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சிங்கள கொடுங்கோலன் ராஜபக்சேவால் நியமிக்க முழுவதும் இலங்கையின் உள்நாட்டு பிரதிநிதிகளைக் கொண்ட இந்த விசாரணை ஆணையமே, இலங்கை ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது உண்மைதான் என பிரகடனப்படுத்தியுள்ளது.
அத்துடன் சிங்கள ராணுவமும், இலங்கை அரசும் மறுத்து வருகிற, உலகின் மனசாட்சி உலுக்கி கதற வைத்த இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சியில் வெளியான ஆவணப்பட காட்சிகள் அத்தனையும் உண்மை என்கிறது இந்த விசாரணை ஆணையம்.
மேலும் இறுதி யுத்தத்தில் வெள்ளைக் கொடி ஏந்தி சர்வதேச சட்டங்களுக்கமைய சரணடைய வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகள் பா. நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை ஈவிரக்கமின்றி படுகொலை செய்தது குறித்து தனி விசாரணையே நடத்த வேண்டும் என்றும் விவரிக்கிறது இலங்கையின் உள்நாட்டு விசாரணை ஆணையம்.
178 பக்கங்களைக் கொண்ட இந்த விசாரணைக் குழுவின் அறிக்கையில் இலங்கை நீதித்துறையில் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க வேண்டும்; இலங்கை நீதித்துறை விசாரணையின் மீது நம்பகத்தன்மை இல்லை; இதனால் சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட விசாரணை தேவை எனவும் வலியுறுத்தி உள்ளது.
இப்படி இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட ஒரு உள்நாட்டு விசாரணை ஆணையமே இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை பகிரங்கமாக ஒப்புக் கொண்டு அது இலங்கை நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை என்பதை இந்த சிங்களவரின் அதாவது இலங்கையின் உள்நாட்டு விசாரணை ஆணையே ஒப்புக் கொண்டுள்ளது.
இதைவிட சர்வதேச சட்டங்களுக்கு வேறு என்னதான் சாட்சி தேவை? ஏற்கெனவே இலங்கை மீது சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற வழக்கு தொடரக் கோரி 10 லட்சம் தமிழர்கள் கையெழுத்திட்டு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம்.
தற்போது இது சிங்கள விசாரணை ஆணையமே சாட்சியாக நிற்கிறதே.. இப்போதாவது ராஜபக்சே, பொன்சேகா, சிறிசேன உள்ளிட்டோரை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றவாளிகளாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனம் செய்து சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற வழக்கு தொடர வேண்டும் என்று உலகத் தமிழினம் வேண்டி கேட்டுக் கொள்கிறது.
இலங்கையின் உள்நாட்டு விசாரணை ஆணைய அறிக்கையின் அடிப்படையில் இந்திய மத்தியப் பேரரசும் இனியேனும் இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் என்பதை ஏற்று அதற்கேற்ப இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கும் தமிழ்நாடு என்ற மாநில மக்களின் உணர்வுகளை மதித்து, தமிழ்நாட்டு மக்களின் அரசு தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றிய இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே; போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென்ற தீர்மானங்களை மதித்து அதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது என கேட்டுக்கொண்டுள்ளார்.

அம்மாடியோவ் ! அதிமுக அரசின் ரூ50,000கோடி ஊழல் புத்தகம் – வரும் 28 ம் தேதி மக்கள் செய்தி மையம் வெளியிடு…




தமிழகத்தில் நடைபெறும் ஊழல்களையும், மணல் மாபியாக்களையும், அ.தி.மு.க அரசிற்கே விரோதமாக செயல்படும் அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகளின் முகத்திரையை மக்கள் செய்தி மையம் வெளியிட்டு வருகிறது.  மூத்த பத்திரிக்கையாளர் அன்பழகன் அவர்களின் வெளியீட்டில் அத்தனையும் தகவல் உரிமை அரியு  சட்டத்தின் கீழ் ஆதாரபூர்வமாக வெளி வர உள்ள இந்த இதழில் அ.தி.மு.க அரசின் ரூ 50 ஆயிரம் கோடி ஊழல்கள் அடங்கியுள்ளன. அதிமுக அரசின் ஊழல் புத்தகம் – மக்கள்செய்திமையம் வரும் 28 ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் மாற்றுகட்சிகளை அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளான முக்கிய கட்சிகள் இந்த புத்தகத்தை வெளியிட மறுத்துள்ளது. தேர்தல் வரும் வேளையில் கூட்டணிக்கான ஒரு சந்தர்ப்பமாக கூட இருக்கலாம் அல்லவா ? எது எப்படியோ அரசின் பணத்தை ஏப்பம் விடும் அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகளின் சொத்துக்கள் முடக்க வேண்டுமென மற்ற சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கான பணிகளை மக்கள் செய்தி மையம் குழுவினர் தற்போதே களமிறங்கியுள்ளனர். இந்த புத்தக வெளியிட்டு விழா மிக பிரமாண்டமாக இருக்க வேண்டுமென்பதற்காக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஓட்டியதோடு, நோட்டீஸ், புத்தக மாடல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகித்து வருகின்றனர்.

Friday, 16 October 2015

எளிய தொண்டனாகிய எம்.ஆர் விஜய பாஸ்கர் கரூர் மாவட்ட செயலாளர் பொதுமக்களிடையே அசத்தல்


சாதாரண வார்டு கவுன்சிலர், ஊராட்சி செயலாளர், ஒன்றியம், நகரம், பேரூர் கழகம் பொறுப்பு எந்த கட்சியில் போட்டு விட்டாலே கட்சி படும் பாடு மத்தியில் நிர்வாகிகளும், அவர்களுக்கென பாடுபடும் நாடோடி படத்தில் வரும் இதற்கென 14 பேர் கொண்ட கும்பல் போல ஆங்காங்கே பிளக்ஸ் வைத்து வருங்கால அமெரிக்க ஜனாதிபதி என்ற கோணத்தில் சித்தரித்து வைப்பது தமிழகத்தில் தற்போது பேமஸ் ஆகி விட்டது. இந்நிலையில் கரூர் மாவட்ட செயலாளர் விஜய பாஸ்கர் எந்த வித ஆடம்பர மின்றி பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார். அதில் எளிய தொண்டன் என்ற வார்த்தை பொதுமக்களை மட்டுமில்லாமல் பிற கட்சி பிரமுகர்களையு கவர்ந்துள்ளது.

தீபாவளி ஸ்வீட்டா ? தமிழக அரசு ஊழியர்கள்-ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்வு: முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு


மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் 6 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்குமாறு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டுள்ளார். 

மத்திய அரசு ஊழியர்களுக்கான 6 சதவீத அகவிலைப்படி உயர்வு கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதன்படி 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக அகவிலைப்படி உயர்ந்தது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போதெல்லாம் அறிவிக்கப்படுகிறதோ அதை பின்பற்றி தமிழக அரசும் உடனே அகவிலைப்படி உயர்வை அரசு ஊழியர்களுக்கு அறிவித்து வருகிறது. 

அதன்படி மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்குவது தொடர்பான கோப்புகள் முதலமைச்சரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியததாரர்களுக்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி வழங்குமாறு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

மத்திய அரசு அலுவலர் மற்றும் ஓய்வூதியதாரர் ஆகியோருக்கான அகவிலைப் படியை 1.7.2015 முதல் 6 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 1.7.2015 முதல் 6 சதவீதம் உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளேன்.  

இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைத்து அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதார்களுக்கும் வழங்கப்படும்.   

இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசு அலுவலர்களுக்கு ரூ.366/- முதல் ரூ.4,620/- வரையில் சம்பள உயர்வும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.183/- முதல் ரூ.2,310/- வரை ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும். 

இந்த அகவிலைப்படி 1.7.2015 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த உயர்வினால் சுமார் பதினெட்டு லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் பயனடைவர். இந்த அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1,501 கோடியே 24 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். 

இந்த அகவிலைப்படி உயர்வு, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மக்கள் பணியில் புதிய உத்வேகத்துடன் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள உதவும் என நான் நம்புகிறேன். 

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Thursday, 15 October 2015

பப்ளிசிட்டி மற்றும் புகழ்ச்சி பிடிக்காத ஒரு மாவட்ட செயலாளர் - கரூரில் அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு எளிய முறையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜயபாஸ்கர்


கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக பணியாற்றிய செந்தில் பாலாஜி, பல்வேறு காரணங்களால் அவரது அ.தி.மு.க மாவட்ட செயலாளர் பதவி பறிக்கபட்டு பின்பு அவரது துறையான போக்குவரத்து துறை அமைச்சர் பதவியையும் முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பறித்தார். பின்பு அ.இ.அ.தி.மு.க வில் கரூர் மாவட்ட ஜெ பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞரணி, எம்.ஜி.ஆர். மன்றம், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆகியவன பிற அணிகளின் ஆதரவுடன் தாந்தோன்றி ஒன்றிய செயலாளரும், தாந்தோன்றி ஒன்றிய குழு உறுப்பினருமான விஜயபாஸ்கர் என்பவருக்கு மாவட்ட செயலாளர் பதவியை கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கொடுத்தார். பின்பு இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களின் மாற்றத்தையடுத்து ஒரே நாளில் ஆங்காங்கே உள்ள எம்.ஜி.ஆர். அண்ணா சிலைகளுக்கு மாலையிட்டு மாவட்ட செயலாளர்கள் தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் அறிமுகம் செய்து கொண்டனர். இந்நிலையில் கரூர் மாவட்ட செயலாளர் விஜய பாஸ்கர் கரூர் அருகே உள்ள வெங்கமேடு அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆனால் மாவட்ட செயலாளர் அண்ணன் விஜய பாஸ்கர் என்று எல்லா தொண்டர்களும் சத்தம் போட அய்யய்யோ, நான் ஒரு எளிய கட்சியின் சாதாரண தொண்டன் என விளக்கம் கொடுத்து எல்லா மூத்த நிர்வாகிகளையும் அழைத்து பிறகே மாலையிட்டார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ வுமான காமராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, கரூர் நகர துணைத்தலைவரும், கரூர் மாவட்ட துணை செயலாளருமான காளியப்பன், கோல்டு ஸ்பாட் இராஜா, தானேஷ் (எ) முத்துக்குமார், க.பரமத்தி ஒன்றிய செயலாளர் மார்க்கண்டேயன், மாவட்ட பொருளாளர் பி.கே.எஸ்.முரளி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கட்சியின் அடிப்படை தொண்டர்கள் முதல் கட்சியின் மூத்த நிர்வாகிகள் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார் புதிய மாவட்ட செயலாளர் விஜய பாஸ்கர், மேலும் இவர் ஜெயலலிதாவிற்காகவே கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரெயின்போ பாஸ்கர் என்கின்ற பெயரை விஜயபாஸ்கர் என்று மாற்றிக் கொண்டார் என்பதும் இவர்தான் தாந்தோன்றி ஒன்றிய குழு தலைவர் பதவி இவருக்கு கொடுக்கப்பட்டு முன்னாள் மாஜி செந்தில் பாலாஜியால் பின்னர் பறிக்கபட்டது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது கூட மாவட்ட செயலாளர் என்கின்ற வார்த்தைக்கு பதில் கரூர் நகரின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே தொண்டர்கள் சார்பில் வைக்கபட்டுள்ள பிளக்ஸ் போர்டில் கட்சியின் எளிய தொண்டனாகிய என்னை கரூர் மாவட்ட செயலாளர் பதவி வகிக்க வைத்த தாயே என்கின்ற வார்த்தை கரூர் நகருக்கு பஸ்ஸில் சென்று வரும் பலரையும் இதயத்தையும், கண்களையும் கவர்ந்துள்ளது. எது எப்படியோ கரூர் மாவட்ட அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Sunday, 13 September 2015

நரபலி கொடுக்கப்பட்ட இடத்தில் எலும்பு துண்டுகள் கண்டெடுப்பு: உறங்காமல் காவல் காத்த சகாயம் டீம்! யார், யாரையோ பாராட்டுகிறீர்கள் இவரை நீங்கள் கண்டிப்பாக பாராட்டத்தான் வேண்டும்






மதுரை மேலுரில் பி.ஆர்.பி நிறுவனம் நரபலி கொடுத்தததாக கூறப்படும் இடத்தில் இருந்து எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மலம்பட்டி சுடுகாட்டில் ஆர்.டி.ஓ. செந்தில் குமாரி, சகாயம் குழு முன்னிலையில் சுடுகாட்டில் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. சுடுகாட்டில் சேவற்கொடியோன் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டிய போது எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது
தற்போது, கிரானைட் விசாரனை இறுதிக்கட்டதை எட்டி, இன்னும் ஓரிரு நாட்களில் உயர் நீதிமன்றத்தில் சகாயம் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதிரடியாக மணிமுத்தாறு சுடுகாட்டில் புதைக்கப்பட்ட இருவரின் உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய சகாயம் குழுவினர் நேற்று காலை 10:00 மணிக்கு சுடுகாட்டிற்கு வந்தனர். புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய 12 ஆம் தேதி காலையில் சகாயம் மாவட்ட நிர்வாகதிற்கும், காவல்துறைக்கும் முறைப்படி தகவலை அனுப்பிவிட்டு நரபலி கொடுத்து உடலை புதைத்த இடத்திற்க்கு சேவற்க்கொடியானுடன் அவர் வந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது .
ஆனால் மாவட்ட நிர்வாகத்தினர், தாசில்தார் கிருஷ்ணண், ஆர்.டி.ஓ. செந்தில் குமாரி உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும் பல்வேறு வேலைகளை கொடுத்து சம்பவ இடத்தில் இருந்து போகச் சொல்லிவிட்டனர். அதேபோல், பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவக்குழுவையும சம்பவ இடத்திற்க்கு அனுப்பாமல் இழுத்தடித்து. மதுரையில் இருந்து சென்ற 5 பேர் கொண்ட மருத்துவக்குழுவை, நான்கு மணி நேரமாக மேலூர் காவல் நிலையத்தில் உட்கார வைத்து மாலை ஆறு மணிக்கு மேல் மலம்பட்டிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் சம்பவ இடதிற்க்கு சென்ற மருத்துவக்குழுவினர், சூரியன் மறைந்துவிட்டதால் இனி பிரேத பரிசோதனை செய்ய முடியாது. அதனால் பிணத்தை தொண்ட வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டனர்.
நண்பகல் இரண்டு மணிக்கு மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர் உங்களை அனுப்பிவிட்டதாக தகவல் சொன்னார்கள். ஆனால் நீங்கள் ஏன் இவ்வளவு தாமதமாக வந்துள்ளீர்கள் என்று சகாயம் கேட்டார். அதற்கு, இவ்வளவு நேரம் போலீஸ் என்கொயரி என்று சொன்னதோடு, மாவட்ட ஆட்சியர் சொன்னால்தான் வேலையை செய்வோம் என்று சகாயத்துடன் வாக்குவாதம் செய்தனர். சகாயம், ''இது உயர் நீதிமன்றம் அமைத்த சட்டப்பனிக்குழு. நான் அதன் ஆணையர் என்கிற முறையில் சொல்கிறேன் நீங்கள் பணியை தொடங்குங்கள்" என்றார். அதற்கு மருத்துவக்குழு, ''எங்களுக்கு ஆட்சியர் தான் எல்லாமே" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர் .
அதன் பிறகு ஏதோ சூழ்ச்சி நடப்பதை உனர்ந்த சகாயம், அந்த இடத்தைவிட்டு நகராமல் இரவு முழுவதும் சுடுகாட்டிலேயே இருக்கப்போவதாக கூறிவிட்டு, கீழே அட்டை, பேப்பர் போன்றவற்றை போட்டு அதில் அமர்ந்து விட்டார். அந்த சுடுக்காட்டில் மின்சார வசதி இல்லாமல் இருப்பதால், மாவட்ட நிர்வாகத்திடம் ஜெனரேட்டர் வசதி செய்து கொடுக்க சொல்லி கேட்டார். ஆனால், மாவட்ட நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. அதனால், அதிகாரி சகாயத்திற்கு ஜெனரேட்டர் வசதி செய்து கொடுக்க பொது மக்கள் மேலூரில் இருந்து ஜெனரேட்டர் ஒன்றும் அதனை ஆப்ரேட்டிங் செய்ய ஆப்ரேட்டர் ஒருவரையும் மினி லாரியில் அழைத்து வந்தனர். ஆனால், வரும் வழியில் அந்த ஜெனரேட்டர் ஆபரேட்டரை மேலுர் காவல் உதவி ஆய்வாளர் அய்யனார் போகவிடாமல் தடுத்து அழைத்து சென்றதோடு, ஜெனரேட்டரில் இருந்த முக்கிய பாகம் ஒன்றையும் கழட்டி எடுத்து சென்று இருக்கிறார்.
அதனால், உணவை கூட சுடுகாட்டிற்கே வரவழைத்து உண்ட சகாயம் இரவு முழுவதும் பெட்ரோமாக்ஸ் லைட் உதவியுடன் கயிற்று கட்டிலில் சுடுகாட்டிலேயே படுத்து கிடந்தார். அவருடன், பொதுமக்களும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்களும், சட்டப் பஞ்சாயத்து அமைப்பை சேர்ந்தவர்களும் இரவு முழுவதும் சகாயம் குழுவினருக்கு பாதுகாப்பாக இருந்தனர்.

Saturday, 12 September 2015

மதிமுகவினரின் திராவிட இயக்க நூற்றாண்டு சுடர் ஓட்டம் கரூரில் இரண்டாம் நாளாக தொடங்கியது அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டு ஆட்சி செய்யும் அ.தி.மு.க விலேயே அண்ணாவின் பிறந்த நாளுக்கு தடை விளைவிக்கும் செயலாக உள்ளது – மாநில மாணவரணி செயலாளர் தி.மு.இராஜேந்திரன் கரூரில் வேதனை



திருப்பூரில் நடக்கும் அண்ணாவின் 107-வது பிறந்த நாள் விழா மற்றும் மதிமுக மாநாடையொட்டி .தி.மு.. சார்பில் திராவிட இயக்க நூற்றாண்டு சுடர் ஓட்டத்திற்கு நேற்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு திருச்சி காவல்துறை அனுமதி மறுத்தநிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதியுடன் திராவிட இயக்க நூற்றாண்டு சுடர் ஓட்டம் நேற்று மாலை திருச்சியில் தொடங்கி கரூர் வந்தது. பின்னர் கரூர் வந்த சுடர் ஓட்டம் நாமக்கல் நோக்கி சென்றது.
திராவிட இயக்க நூற்றாண்டு விழா, அண்ணாவின் 107-வது பிறந்தநாள் விழா, .தி.மு.. மாநாடு ஆகியவை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதற்காக திருச்சி மாநகர் முதல் பல்லடம் வரை திராவிட இயக்க நூற்றாண்டு சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாணவர் தொடர் ஓட்டம் வருகிற 15-ந் தேதி திருப்பூர் பல்லடத்தில் மாநாடு திடலில் முடியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு அனுமதி கோரி .தி.மு.. மாநில மாணவரணி செயலாளர் ராஜேந்திரன் போலீசாரிடம் மனு அளித்து இருந்தார். நேற்று காலை 10 மணி அளவில் சத்திரம் பஸ் நிலையம் அருகே மாணவர் சுடர் ஓட்டம் தொடங்க இருந்தது. 
ஆனால் மாணவர் சுடர் ஓட்டத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் திடீரென அனுமதி மறுத்தனர். இதனால் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசாரின் அனுமதி மறுப்புக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, மாணவர் சுடர் ஓட்டம் நடத்த அனுமதி வழங்கியது. இதையடுத்து நேற்று மாலை சிந்தாமணி அண்ணாசிலை பகுதியில் இருந்து மாணவர் சுடர் ஓட்டத்தை தொடங்கினர். 
நிகழ்ச்சிக்கு மாநில மாணவரணி செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். .தி.மு.. ஆட்சிமன்ற குழு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான கணேசமூர்த்தி சுடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் இந்த சுடர் ஓட்டத்தை ம.தி.மு.க மாநில மாணவரணி நிர்வாகிகள் பலரும் ஏந்தி சென்றனர். 
சுடர் ஓட்டம் திருச்சியில் தொடங்கி, ஜீயபுரம், குளித்தலை, லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், கரூர் வந்தது. கரூருக்கு வருகை தந்த அந்த சுடர் ஓட்ட குழுவை ம.தி.மு.க அரவக்குறிச்சி செயலாளர் கலையரசன் வரவேற்றார். பின்னர் கரூரிலிருந்து இன்று அந்த சுடர் ஓட்டம் துவங்கி நாமக்கல் வழியாக, ஈரோடு, திருப்பூர் செல்ல உள்ளது. முன்னதாக கரூரில் பேட்டியளித்த மறுமலர்ச்சி தி.மு.க மாணவரணி செயலாளர் தி.மு.இராஜேந்திரன் தெரிவிக்கையில் பேரறிஞர் அண்ணாவின் பெயரை சொல்லி ஆட்சி நடத்துகின்ற அ.தி.மு.க அரசு அண்ணாவின் பிறந்த நாளுக்கே தடை விதித்தது போல் இத்தைகைய செயல் இருந்ததாகவும், எங்களது பொதுச்செயலாளர் சென்னை உயர்நீதிமன்ற கிளையில் அந்த தடையை தகர்த்தெரிந்து அண்ணாவின் பிறந்த நாளை சீறும் சிறப்புமாக கொண்டாடும் வகையில் எங்களுக்கு வழிவகை செய்து தந்துள்ளார். என்றார். மேலும் சுமார் 324 கி.மீட்டர் தூரம் செல்லும் இந்த சுடர் ஓட்டமானது, கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் வழியாக நாமக்கல் மாவட்டம், க.பரமத்தி வேலூர் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக நாமக்கல் வழியாக பல்லடத்தை சென்று அடைகிறது. பல்லடத்தில் மாநாட்டு திடலில் .தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ சுடரை பெற்று கொள்கிறார். நிகழ்ச்சியில் ம.தி.மு.க இலக்கிய அணி துணை செயலாளர் பொத்தனூர்.ஈழபாரதி, அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கலையரசன், தாந்தோன்றி ஒன்றிய செயலாளர் கபினி.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேட்டி : திமு.இரோஜேந்திரன் – மாநில மாணவரணி செயலாளர் – ம.தி.மு.க


பாராட்டுக்கு மேல் பாராட்டுக்கள் குவிகிறது தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற சேரன் பள்ளி முதல்வர் வி.பழநியப்பன்


டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் தேசிய நல்லாசிரிய விருது பெற்ற கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் வி.பழநியப்பனுக்கு கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க அலுவல் விழாவில் லயன்ஸ் ஆளுனர் பிம்.எம்.ஜே.எப். அரிமா எஸ்.வேதநாயகம், கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் சார்பில் பாராட்டி பரிசுகள் வழங்கிய போது எடுத்த படம். அருகில் மாவட்ட அமைச்சரவை ஆலோசகர் மேலை.பழநியப்பன், கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க தலைவர் இன்ஜினியர் ஆர்.தினகரன், செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகேயன், பொருளாளர் குமாரராஜா, மண்டல தலைவர் சூர்யா.வே.கதிரவன் உள்ளிட்டோர் உள்ளனர்

Friday, 11 September 2015

பிடி அரிசித்திட்டத்தில் கரூர் மெஜஸ்டிக் சங்கம் பங்களிப்பு ! ஆளுநர் வருகை விழாவிலேயே ஆயிரம் கிலோ அரிசி வழங்கியது


கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்திற்கு மாவட்ட லயன்ஸ் ஆளுனர் வருகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்சியில் பிடி அரிசித்திட்டம் உள்ளிட்ட சேவைகள் நிறைவேற்றப்பட்டன.
கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்திற்கு ஆளுனர் அலுவல் வருகையாக 324 A 2 லயன்ஸ் மாவட்ட ஆளுனர் பி.எம்.ஜே.எப். அரிமா. எஸ்.வேதநாயகம், மாவட்ட முதல் பெண்மணி சாந்தி வேதநாயகம் ஆகியோர் வருகை புரிந்தனர். முதலில் பாதுகாப்பு, தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணியாக 150 லியோ சங்கத்தினர் கலந்து கொண்ட மாபெரும் இரு சக்கர பேரணியை லயன்ஸ் ஆளுநர் வேதநாயகம் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். மாலை அலுவல் விழாவில் ஆளுனரின் பிடி அரிசித் திட்டப்படி 1 லட்சம் கிலோ வழங்குதலில் கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் பங்காக கரூர் பகுதியில் உள்ள சக்தி ஆதரவற்றோர் இல்லம், அன்பாலயம், கரூர் அன்புக்கரங்கள், யுகம் டிரஸ்ட், சித்தார்த்தா டிரஸ்ட் உள்ளிட்ட ஆதரவற்ற குழந்தைகளை பராமரிக்கும் இல்லங்களுக்கு முதல் கட்டமாக ஆயிரம் கிலோ அரிசி வழங்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கு சிண்டெக்ஸ் டேங்க், மின் விசிறி,  கல்வி, மருத்துவ உதவிகள், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வி.பழநியப்பன், கரூர் நரிக்கட்டியூர்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலலிதா, நகராட்சி துப்புரவு தொழிலாளி இரா.வையாபுரி, கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் பரிந்துரைத்து லயன்ஸ் நல்லாசிரியர் விருது பெற்ற கு.பரணிதரன் உள்ளிட்டோர் பாராட்டு பெற்றனர். முன்னதாக ஆளுநர் எஸ்.வேதநாயகத்தை மாவட்ட அமைச்சரவை ஆலோசகர் மேலை.பழனியப்பன் அறிமுகப்படுத்தினார்.
ஆளுநர் பி.எம்.ஜே.எப். அரிமா எஸ்.வேதநாயகம், சாந்தி வேதநாயகம், அவைச்செயலாளர் ஜனார்த்தனன், மண்டலத் தலைவர் சூர்யா. வே.கதிரவன், வட்டாரத்தலைவர் கே.மனோகரன், எஸ்.கே.டி.எம்.கருப்புசாமி வாழ்த்துரைத்தனர். கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க தலைவர் இன்ஜினியர்.ஆர்.தினகரன், செயலாளர் வழக்கறிஞர் பி.கார்த்திகேயன், பொருளாளர் குமாரராஜா ஆகியோர் வரவேற்றனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய லயன்ஸ் ஆளுனர் பி.எம்.ஜே.எப்.அரிமா எஸ்.வேதநாயகம், இந்த லயன்ஸ் சங்கம், உலகளவில் இருந்தாலும் கண் தானத்தில் இந்தியா இரண்டாமிடம்., அதில் தமிழகம் முதலிடம் என்று பெருமை படுத்தினார். இரத்த தானத்தை தொடர்ந்து கண் தானம் மனிதன் வாழ்வில் அவசியம் என்று பேசினார். உடல் உறுப்புகள் தானத்திலும் லயன்ஸ் சங்கங்கள் சிறந்து விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

நடிகர் கமலஹாசன் ஆம் ஆத்மியில் இணைந்தாரா ? இல்லையா ?



டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நடிகர் கமல்ஹாசன் திடீரென சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பு  தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு தமிழ்நாட்டின் தூதராக கமல்ஹாசன் நியமிக்கப்பட்டார், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களக்கு தூய்மை இந்தியா திட்டதின் தூதராக நியமிக்கப்பட்ட பிரபலங்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி மாளிகையில் நேற்று தேநீர் விருந்தளித்தார்.

இந்த தேநீர் விருந்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான்கான், பிரியங்கா சோப்ரா, அமலா நாகார்ஜுனா, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர், தொழிலதிபர் அணில் அம்பானி, இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதற்கிடையே டில்லியில் ஆம்ஆத்மி கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை நடிகர் கமல்ஹாசன் திடீரென சந்தித்து பேசியிருக்கிறார். அப்பொழுது கெஜ்ரிவால் கமல்ஹாசனிடம் இந்தியாவின் அரசியில் குறித்தும் விரிவாக விவாதித்தாகவும், தமிழகத்தி்ன் அரசியல் சூழ்நிலை குறித்து கேட்டறிந்ததாகவும்,தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு சரியான தலைமை இல்லை என்றும் மாநில தலைவராக நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்ற  கமல்ஹாசனிடம் கெஜ்ரிவால் கேட்டு கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு சரியான தலைமை இல்லாத நிலையில், இந்த சந்திப்பு நடந்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.