Thursday, 31 December 2020
Wednesday, 23 December 2020
Tuesday, 22 December 2020
Friday, 18 December 2020
Thursday, 17 December 2020
Saturday, 12 December 2020
Saturday, 7 November 2020
Thursday, 5 November 2020
Wednesday, 4 November 2020
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக முகூர்த்த கால் ...
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்தினையொட்டி முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்பு
கரூர் நகரில் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ செளந்தரநாயகி அருள்மிகு ஸ்ரீ அலங்காரவள்ளி உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயமானது, தமிழக அளவில் உள்ள சிவ ஆலயங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் இந்த ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் மாதம் 4 ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று யாக சாலையின் அமைப்பு பணியின் முதல் துவக்கமாக முகூர்த்த கால் ஊன்றப்பட்டது. ஆலயத்தின் உட்புறம் நடைபெற்ற இந்த முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சியில் கும்பாபிஷேக கமிட்டியின் தலைவரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. மேலும், இந்நிகழ்ச்சியில் துணை தலைவர் அரவிந்த் தங்கவேல் மற்றும் விழா கமிட்டியினர் மேலை.பழநியப்பன், மல்லிகா சுப்புராயன், மதுசுதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனையொட்டி ஆலயத்தில் புதிதாக புணரமைக்கப்பட்டு, கலைநயத்துடன் கூடிய வேலைப்பாடுகளுடன் காணப்பட்ட சிற்பங்களின் கண்களை திறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் மஹா தீபாராதனை முகூர்த்த காலுக்கு காட்டப்பட்டு சிறப்பு ஆராதனைகளை ஆலய சிவாச்சாரியார்கள் மேற்கொண்டனர்.
Subscribe to:
Comments (Atom)